--- --:--:-- --

ஊராட்சித் தலைவர் பதவிக்காக நடந்த கூட்டத்தில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை

2

சாத்தூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவி தொடர்பாக நடந்த கூட்டத்தில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக பேசிய வங்கி மேலாளர் கொலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று நள்ளிரவில் கூட்டம் நடத்தினர்.

 

அப்போது அதே ஊரை சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் ராமசுப்பு என்பவர் தாம் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் தலைவர் பதவிக்கான விருப்ப மனுவை வழங்கியுள்ளார்.

 

இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த வங்கி மேலாளர் சதீஷ்குமார் அக்கூட்டத்திற்கு சென்று தனது உறவினர் சுப்புராமுவிற்கு ஆதாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் சதீஷ்குமாரை சிலர் கடுமையாக தாக்கியதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

 

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ஊராட்சி தலைவர் பதவிக்காக உள்ளூரிலேயே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராமசுப்பு உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon