இரண்டாவது மனைவியை வாழவைக்க 34 வாகனங்களை திருடிய பலே திருடன்!
தனது இரண்டாவது மனைவியை சொகுசாக வாழ வைக்க மூன்று மாதங்களில் 34 வாகனங்களை திருடிய பலே திருடனை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன.
இதுதொடர்பாக காவல் நிலையத்தின் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இரவில் திருவெறும்பூர் மலை கோவில் அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
இதில் அவர் தஞ்சை மாவட்டம் வீரசிங்கம்பேட்டை சேர்ந்த அகஸ்டின் என்பதும், திருச்சியில் தொடர் இருசக்கர வாகனத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருடப்பட்ட வாகனங்கள் அனைத்தையுமே பழைய இரும்பு கடைகளில் விற்று அதில் வந்த பணத்தை அகஸ்டியன் உல்லாசமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
மேலும் தனது இரண்டாவது மனைவியின் ஆடம்பர செலவுக்காக அதிக அளவில் வாகனங்களை திருடிய தாகவும் காவல்துறையின் விசாரணையில் புலம்பியிருக்கிறார் அகஸ்டியன். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து முப்பது இருசக்கர வாகனங்களையும் 2 கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




