“ஆபாச படம் பார்ப்பவர்களின் லிஸ்ட் தயாராகி கொண்டிருக்கிறது!”
சென்னையில் குழந்தைகளின் ஆபாச படம் பார்ப்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
ஆபாச படம் பார்த்த 50,000 இணைய முகவரிகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் ஆபாச படம் தொடர்பான இணையதளங்களும் முடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





