ஆபத்தான முறையில் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் வாய்க்காலில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே கழுவன்தோண்டி கிராமத்தில் இடுகாட்டிற்கு செல்ல போதிய சாலை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.

 

இடுகாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் நைனார் ஏரி வாய்க்கால் வழியாக எடுத்துச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கழுவன் பகுதியில் கனமழை பெய்து வருவதால் நைனார் ஏரி வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி கோசலை அம்மாள் உயிரிழந்த நிலையில் இறுதி சடங்கிற்காக அவரது சடலம் வாய்க்கால் வழியாக கொண்டு செல்லப்பட்டது. வாய்க்காலில் தேங்கியுள்ள இடுப்பளவு தண்ணீரில் சுமார் 20 மீட்டருக்கு சடலத்தை மக்கள் தோளில் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இடுகாட்டிற்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Leave a Reply