--- --:--:-- --

பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

Large avalanche coming down the rocky Caucasus mountain

Real huge avalanche comes from a big mountain (Shkhara, 5,193 m), Caucasus, Kabardino-Balkaria, Bezengi region, Russia

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இமயமலையில் மீது உள்ள சியாச்சின் பனிமலை பகுதி ஆண்டு முழுவதும் பனிக்கட்டிகளால் நிறைந்து காணப்படும். ஊடுருவலைத் தடுக்க இந்தப் பகுதியில் முகாம் அமைத்து இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தற்போது ஜம்மு-காஷ்மீரின் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பனிப் பொழிவின் அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சியாச்சின் வடக்கு பகுதியில் சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் நேற்று பிற்பகல் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

 

இதில் 6 ராணுவ வீரர்கள் 2 பணியில் அடங்கிய குழுவினர் சிக்கித் தவித்தனர்.இதையடுத்து மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு 8 பேரும் காயங்களுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எனினும் 4 ராணுவ வீரர்களும், 2 தொழிலாளர்களும் இறந்துவிட்டதாகவும், 2 வீரர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சியாச்சனில் மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒன்பது வீரர்கள் பனியில் உயிரோடு புதைந்து உயிரிழந்தனர். 6 நாட்களாக சிக்கியிருந்த ஹனுமந்தா என்ற வீரர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon