சோனியா, ராகுல், மம்தா உள்ளிட்ட 20 தலைவர்கள் – ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வருகை
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திப்பதற்காகச் சென்னை வரும் இந்தியா கூட்டணித் தலைவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அபிஷேக் பானர்ஜி, சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, கபில் சிபல் உள்ளிட்ட 20 தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக தனது ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்த இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




