ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயில் சேவை நீட்டிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரமானது ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஸ்தலமாக விளங்குவதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வரும் பயணிகளின் பயண வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து ரயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் – ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயிலானது இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் நவம்பர் மாதம் வரை மட்டும் இயக்கப்படுவதாக கடந்த மாதம் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. பயணிகள் வரவேற்பு அதிகரித்து மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலை பண்டிகை போன்ற நாட்கள் தொடர்ச்சியாக வருவதால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் வரை நீடிப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி டிசம்பர் 13, 20, 27, ஜனவரி 03, 10, 17, 24 ஆகிய நாட்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06:50 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 05:20 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்துவிடும்.
ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 14, 21, 28, ஜனவரி 04, 11, 18, 25 ஆகிய நாட்களில் இரவு 08:00 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய் கிழமை இரவு 07:40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இதற்கான முன்பதிவு டிசம்பர் 1-ம் தேதி முதல் துவங்கும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




