--- --:--:-- --

திமுக எம்.பி.-க்களுடன் ஆலோசனை நிறைவு..!

1

நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நாளை தாக்கலாக உள்ள நிலையில், அதற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை நேற்றைய தினம் எடுத்தது திமுக.
இதற்காக நேற்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.-க்கள் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதில் பேசிய மு.க.ஸ்டாலின், 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என திருத்தப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.

 

 

இதனால் அந்த மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பதாகவும் நேற்றைய தினம் அவர் தெரிவித்தார். இதையடுத்து திமுக-வின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி, காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இன்று சென்னைக்கு படையெடுத்துள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும், திட்டமிடலும் இல்லாமல் தற்போது காங்கிரஸ் தலைவர்களின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

 

 

இவர்களில் தற்போது ராகுல் காந்தி சென்னைக்கு வந்தடைந்துள்ளார். ஒவ்வொருவராக சென்னைக்கு வந்த பின்னர், நட்சத்திர விடுதியொன்றில் கூட உள்ளனர். அங்கு சற்று நேரம் ஓய்வெடுத்த பின்னர், 4 மணியளவில் அனைவரும் இணைந்து மு.க.ஸ்டாலினை அவரது சித்தரஞ்சன் சாலை வீட்டில் சந்திக்க உள்ளனர்.

 

 

இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தற்போது மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதற்காக தன் வீட்டிலிருந்து அவர் புறப்பட்டுள்ளார். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார் அவர். தொடர்ந்து தன் இல்லத்திற்கு திரும்பி, 4 மணியளவில் அவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலுவும் இருக்கிறார்.

 

 

இதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக, இந்தியா கூட்டணி தலைவர்கள் சங்கமிக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் அவர் தலைமையில் திமுக எம்.பி.-க்களின் ஆலோசனை நடைபெற்றது. இதில் கலாநிதி வீராசாமி, வில்சன், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon