உயிரிழந்த காசிமேடு மீனவர் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”நமது தொன்மை சார்ந்த மீனவ மக்கள் தமிழ்நாடு ஏஐடியூசி சார்பில் சங்கம் உருவாக்கி உள்ளார்கள். டாக்டர் சிங்காரவேலர் மீனவர் நலச் சங்கம் என்பதையும் தொடங்கி இருக்கிறார்கள். ஆசியாவிலேயே முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கியவர் மறக்க முடியாத திசைவழி தோழர் சிங்காரவேலர்.
அரசு கட்டும் வீடுகளில் மீனவ மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயர் நிகழ்வு; அவர்களுக்கு நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




