செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் தீவிர விசாரணை
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில், சிபிசிஐடி போலீசார் 37வது நாளாக தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக சிறுமியின் தந்தையிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தாய் பவானி மற்றும் பாட்டி சாந்தியிடம் விசாரணை நடத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்படும் தொடர் விசாரணைகளின் மூலம் சிறுமி குறித்த துப்பு துலங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




