மீண்டும் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரிந்தது தங்கம் விலை
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த 5 நாட்களுமே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது.அந்த வகையில் மீண்டும் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15அம் தேதி முதல் முறையாக தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தொட்டது.
அதனை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டியது. அடுத்த ஆண்டில் ரூ.2 லட்சத்தை தொட்டு விடும் என்ற அச்சம் இருந்தது.இந்த நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் நகை பிரியர்களுக்கு ஒரு வரபிரசாதமாகவே அமைந்துள்ளது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,470க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.10,205க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.81,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.190க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




