--- --:--:-- --

இவர்களெல்லாம் இனி பணியில் தொடர முடியாது – பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு

1

டிஎன்பிஎஸ்சி மற்றும் பணி மாறுதல்கள் மூலம் கல்வித்துறையில் சேர்ந்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் 5 ஆண்டுகளுக்குள் துறை தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் துறை தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, தகுதிகாண பருவத்தை முடிக்காதவர்களை பணியில் தொடர அனுமதிக்க கூடாது எனவும் பள்ளிக்கல்வி துறையின் இயக்குனர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறையின் புதிய இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படை / தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் / கீழ்நிலைப் பதவியிலிருந்து பணி மாறுதல் /மக்கள் தொகை கணக்கெடுப்புக் பணியிலிருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஈர்க்கப்பட்டவர்கள் போன்ற முறைகளில் நியமனம் செய்யப்பட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், மற்றும் தட்டச்சர்களுக்கு தகுதிகாண் பருவம், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-இன் பிரிவு 31(4)-ன் படி ஐந்தாண்டுகள் வரை நீடித்து அக்காலக்கட்டத்திற்குள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-இன் பிரிவு 31(4)-இல் தகுதிகாண் பருவத்தினர் நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் (maximum) வரை தகுதிகாண் பருவத்தினை தனியர் பொருட்டு நீட்டிப்பு செய்யலாம் என்றும், அவ்வாறு 5 ஆண்டுகளுக்குள் (maximum) துறை தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தகுதிகாண் பருவத்தினை முடிவிற்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள வரம்பிற்குள் தேர்ச்சி பெறாதவர்களை (5 ஆண்டுகள் கடந்து தேர்ச்சி பெறாதவர்களை) தகுதிகாண் பருவத்தினை முடிவிற்கு கொண்டு வந்து பணியிலிருந்து விடுவிப்பு செய்ய வேண்டுமே தவிர அவர்களை பணியில் தொடர அனுமதிக்க நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே இனிவரும் காலங்களில் மேற்சொன்ன சட்டப்பிரிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் இது தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-இன் பிரிவு 31(4)-ன் படி உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் தகுதிகாண் பருவம் முடித்தல் தொடர்பாக மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon