இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி வீட்டில் தொடரும் போலீஸ் சோதனை..!
மதுரையில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சியின் வீட்டில் காவல்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கும் நோக்கில் அவரது வீட்டில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனையின்போது கொள்ளை வழக்கு தொடர்பான நகைகள் மற்றும் பிற தடயங்கள் கிடைக்கிறதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




