அம்மன் நகர் ஸ்ரீ வளம்புரி செல்வ சித்தி விநாயகர் கோவிலில் முருகன் – வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் கோலாகலம்
திருப்பூர் அம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வளம்புரி செல்வ சித்தி விநாயகர் திருக்கோவிலில், கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவையொட்டி, அதிகாலை முதலே மூலவர் விநாயகர் மற்றும் உற்சவ மூர்த்திகளான முருகன், வள்ளி, தெய்வானைக்குப் பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க முருகப்பெருமானுக்கும், வள்ளி – தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அம்மன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘அரோகரா’ கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




