--- --:--:-- --

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை

8

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த சில நாட்களில் வலுப்பெற்று புயலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புள்ளது.

 

 

நவம்பர் 17-ஆம் தேதி வரை வங்கக் கடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மக்கள் அடுத்த சில நாட்களுக்கு வானிலை அறிவிப்புகளைக் கவனிக்க வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon