--- --:--:-- --

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மதிய நேர ரயில்!

8

சென்னை சென்ட்ரல் மற்றும் திருவண்ணாமலைக்கு இடையே காட்பாடி மற்றும் போலூர் வழியாக தினசரி பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என போலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் ஜி.எம்.எஸ். ரயில்வேயை வலியுறுத்தியுள்ளனர்.

 

அதாவது, கடந்த வருடம் சித்ரா பௌர்ணமி தினத்தன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது போல மதிய நேரத்தில் ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டால் இந்த பகுதி மக்களுக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து மேலும் ஒரு ரயில் மதிய நேரத்தில் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டால் பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

தற்பொழுது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். இவர்களின் வருகைக்காகவும் இங்கு உள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் திருவண்ணாமலைக்கும் திருப்பதிக்கும் இடையே ரயில் சேவை இருந்தால் பெரும் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

வடதமிழக மக்கள் திருப்பதிக்கு சென்று வரவும் திருப்பதியில் உள்ள மக்கள் திருவண்ணாமலை வந்து கோயில் தரிசனம் செய்யவும் இந்த ரயில் சேவை பெரும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதிக்கும் திருவண்ணாமலைக்கும் தினசரி இரண்டு முறை காலை மாலை வேளைகளில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். தென்மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் திருச்சி – கடலூர் ரயில் வேலூர் கன்டோன்மெண்ட் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon