அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் அதிபர் டிரம்புக்கு சரிவை ஏற்படுத்தியது முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255க்கும் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.13,210க்கும் சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,810க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.86,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.205க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




