சென்னையில் இன்று போக்குவரத்து விதிமீறல்கள் அற்ற நாள்
சென்னை பெருநகரில் இன்று போக்குவரத்து விதிமீறல்களற்ற நாள் (Zero Tolerance Day) கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் சிறப்பு சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தலைக்கவசம் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் அணியாதது, சிக்னல் மீறுவது மற்றும் செல்போன் பேசிட்டுக் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களைக் கட்டுப்படுத்த இந்தச் சிறப்புத் தணிக்கை நடத்தப்படுகிறது. வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளைத் முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




