--- --:--:-- --

டெல்லி மெட்ரோவின் 6 நிலையங்களில் மாலை 4 மணி வரை நுழைவு, வெளியேற்ற வாயில்கள் அடைப்பு

9

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்தத் திட்டமிட்டுள்ள போராட்டத்தையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜன்பத், மண்டி ஹவுஸ், பாராகம்பா ரோடு, சென்ட்ரல் செக்ரடேரியட், ராஜீவ் சவுக் மற்றும் படேல் சவுக் ஆகிய 6 டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேற்ற வாயில்கள் திங்கள்கிழமை மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

 

 

இருப்பினும், இந்த 6 நிலையங்களிலும் ரயில்கள் மாறும் (interchange) வசதி தொடர்ந்து செயல்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் கழகம் (DMRC) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு முகமைகள் சூழ்நிலையை ஆய்வு செய்யும் என்றும், அதற்கேற்ப அடுத்தகட்ட தகவல்கள் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “வாக்கு திருட்டு” (“vote chori”) குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon