உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு, அசாம் மாநிலத்தில் இருந்து “சிவா” என்ற குட்டி ஆண் யானை புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. கோயிலில் ஏற்கனவே ராமலட்சுமி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக அசாமில் இருந்து லாரி மூலம் சுமார் 10 நாட்கள் பயணித்து சிவா யானை வந்தடைந்ததுள்ளது.