13 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வு இல்லை: அம்மா உணவக ஊழியர்கள் வேதனை
சென்னையில் அம்மா உணவகங்களில் பணியாற்றி வரும் சமையல் ஊழியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், கருப்பு ஆடை அணிந்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 13 ஆண்டுகளாக அம்மா உணவகங்களில் பணியாற்றி வரும் தங்களுக்கு இதுவரை போதிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும், தங்களது நீண்டகால கோரிக்கைகள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




