--- --:--:-- --

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?

4

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.14,000க்கும் சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ச்சியாக 3 நாட்களும் சரிந்து வந்த தங்கம் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,010க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,780க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon