--- --:--:-- --

பிஞ்சுக் குழந்தைகளின் உயிருடன் விளையாடும் விஜய் அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

images - 2026-09-24T195338.900

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேலகண்டைப் பள்ளியில் காலை உணவில் பல்லி விழுந்து 11 பிஞ்சுக் குழந்தைகள் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி விலகுவதற்குள், அடுத்ததாகத் திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் நடுநிலைப் பள்ளியிலும் உணவில் பல்லி விழுந்து 36 மாணவச் செல்வங்கள் வாந்தி, மயக்கமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது.

 

தவெக ஆட்சியில் நிர்வாகத் தோல்விகள் தொடர்கதையாகிவிட்டன; எங்கள் ஏழை, எளிய குழந்தைகளின் உயிரோடு விளையாடும் இந்த விபரீதத்தை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தரமான உயர்சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய அலட்சியத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, போர்க்கால அடிப்படையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்களின் உணவுப் பாதுகாப்பை விரைந்து உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

நயினார் நாகேந்திரன்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon