--- --:--:-- --

முறிந்தது பாஜக- சிவசேனா கூட்டணி! மத்திய அரசில் இருந்தும் வெளியேறியது

shisena bjp

மகாராஷ்டிராவை தொடர்ந்து மத்தியிலும் பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது; மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையை ஏற்று, மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளியேறியது.

 

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முதலில் பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதை பாஜக ஏற்காத நிலையில், சிவசேனாவுக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனா அரசு அமைக்க ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்திருந்தது.

 

இந்த நிலையில், சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந்த், தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர், மத்திய கனரக தொழில்கள், பொதுத்துறை நிறுவனத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon