--- --:--:-- --

சோனியா காந்தி சுயசரிதையை பிரசுரிக்கவில்லை – பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா அறிவிப்பு

3

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையை தங்கள் நிறுவனம் பிரசுரிக்கவில்லை என புத்தக வெளியீட்டாளரான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா அறிவித்துள்ளது. Belonging: A Journey of Love என்ற புத்தகத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனை பென்குயின் நிறுவனம் வெளியிட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், அதில் இருந்து விலகி உள்ள பென்குயின் நிறுவனம் தங்கள் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்ட மாற்றங்களை புத்தக ஆசிரியர் சோனியா காந்தி ஏற்க மறுத்ததால் இந்த முடிவு உள்ளதாகவம் அறிவித்துள்ளது. நூலை வெளியிட தாங்கள் ஆர்வமாக இருந்ததாகவும், ஒரு பதிப்பாளராக நூலில் இடம்பெறும் தகவல்களைச் சரிபார்ப்பதும், நூலின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியருக்கு பரிந்துரைகளை வழங்குவதும் தங்களது பொறுப்பு என்றும் பெங்குயின் தெரிவித்துள்ளது.

 

 

பென்குயின் விலகியுள்ள நிலையில், இந்தியாவில் இந்த நூலின் வெளியீட்டு உரிமையை பெற பல பதிப்பகங்கள் போட்டியில் உள்ளதாகவும், ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 10ஆம் தேதி இந்த புத்தகம் வெளியாகிறது.

 

 

இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். அழுத்தத்தின் பேரில் உண்மைகளை மாற்றுமாறு பதிப்பகங்களையும் பாஜக அரசு நிர்பந்திக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், இந்தியாவில் அச்சிடப்படும் ஒரு புத்தகத்தில் உண்மையை எழுதுவதற்குக்கூட அனுமதி பெற வேண்டிய நிலை ஏன் உருவாக வேண்டும் என்றும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon