--- --:--:-- --

நேபாள வெள்ளம் – தயாநிதி மாறன் பதிவு

5

திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் மற்றும் காணாமல் போன இந்திய சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 50 சுற்றுலாப் பயணிகளை உடனடியாக மீட்டு பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரி மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

 

 

சாலைகள், பாலங்கள் மற்றும் தகவல் தொடர்பு வலைப்பின்னல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, மீட்டு, பாதுகாக்கவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக இந்தியா திரும்புவதை உறுதி செய்யவும் மத்திய அமைச்சகம், இந்தியத் தூதரகம் மற்றும் மீட்புக் குழுக்கள் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon