--- --:--:-- --

அயோத்தியும், ஆண்டாண்டுகளாக தொடர்ந்த சர்ச்சையும்!

temple KK

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் சூழலில் அங்கு நடைபெற்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகளை ஆண்டு வாரியாக சுருக்கமாக காண்போம்.

 

1528: அயோத்தியாவில், பாபர் ஒரு மசூதியை காட்டுகிறார். அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்து அமைப்பினர் உரிமை கோரினர்.

 

1853-1949: இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றன. தொடர்ந்து அந்த இடத்தின் உட்பகுதியை இஸ்லாமியர்களுக்கும், வெளிப்பகுதியை இந்துத்துவர்களுக்கும் ஒதுக்கியது பிரிட்டிஷ் அரசு.

 

1949: மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட, மோதல் உருவானது. இதை தொடர்ந்து, அது பிரச்னைக்குரிய இடம் என்று, மத்திய அரசு அறிவித்து, அப்பகுதியை பூட்டி சீல் வைத்தது.

 

1950 : ராமர் சிலைக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கவேண்டும் என இரண்டு மனுக்கள் பைசாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 1959 ம் ஆண்டு நிர்மோஹி அகராவால் மூன்றாம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

1961 : உத்திரபிரதேச சன்னி வக்ப் வாரியத்தின் சார்பில், இடத்தைத் தங்களிடம் அளிக்கக்கோரியும் அங்குள்ள சிலைகளை அகற்றவேண்டும் என்றும் கோரியும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன.

 

1986 : பிரச்னைக்குரிய இடத்தின் கதவுகளின் பூட்டை அகற்றவும், ராமர் சிலைக்கு பூஜைகள் செய்யவும் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

 

1992 , டிசம்பர் 6 : கரசேவகர்களால் மசூதி சேதப்படுத்தப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் மோதல்கள் ஏற்பட்டன.

 

2001 : மசூதி இடிப்பு மற்றும் வன்முறை குறித்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக கூறப்பட்ட அத்வானி, கல்யாண் சிங் உள்பட 13 பேரை விடுவித்தது.

 

2010 : அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் இடத்தை மூன்றாக பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூவருக்கு, ஆளுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொடுக்க வேண்டும்’ என, அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ல் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

 

2011 : அலஹாபாத் வழங்கிய இந்தத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

 

2017 : ராமர் கோவில் -மசூதி பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியில் பேசி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியது.

 

2019 மார்ச் 8 : இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிடம் பேசி முடிக்க நடுவர் குழுவுக்கு எட்டு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்

 

2019 ஆகஸ்ட் 1 : நடுவர் குழு தந்தது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.

 

2019 ஆகஸ்ட் 2 : அயோத்தி விவகாரத்தில் நடுவர் குழு சரியான தீர்வை அடையாமல் தோல்வி அடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

 

2019, நவம்பர் 09: உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்குகிறது.

Leave a Reply

Right Menu Icon