கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்கள் தற்போதும் தொடர்கிறது – பாமக கணேஷ்குமார்
கோவை மாணவர் கொலை சம்பவம் மன வேதனை அடைகிறது. அதேபோல் திருவொற்றியூர் மாணவர் கொலை சம்பவமும் நடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆட்சி எந்தெந்த காரணத்திற்காக நீக்கப்பட்டு இந்த ஆட்சி அமைந்துள்ளதோ அந்த சம்பவங்களும் காரணங்களும் தொடர்வது அது வேதனை அளிக்கிறது.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தடுக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இரண்டு கொலைகளுக்கும் காரணம் என என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். காவல்துறை விசாரணை போதுமானதாக இருக்காது – பாமக கணேஷ்குமார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




