ஒடுக்க முடியாது: சிறையில் இருந்து வெளியே வந்த திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேட்டி
ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயாராகவே உள்ளதாகவும், சிறையில் அடைப்பதால் தன்னை ஒடுக்கிவிட முடியாது என்றும் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டப்பேரவையில் திமுக கடுமையான எதிர்வினைகளைக் கொடுக்கும் என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




