--- --:--:-- --

உதயநிதி விடுதலை உத்தரவு த.வெ.க.வின் பாசிசத்திற்கு விழுந்த அடி: ஸ்டாலின்

8

நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்கக் கூடாது என்று நினைத்து கைது செய்திருக்கிறார்கள். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது.

 

 

ஆட்சிக்கு வந்தது முதல், தன்னையும் தனது அமைச்சர்களையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி.

 

 

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும். தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும். ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon