--- --:--:-- --

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி : பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

7

டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க அவை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால், மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

 

 

அவைத் தலைவரின் இருப்பிடத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவை நடவடிக்கைகளை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon