வங்கி மேலாளரை அறைந்ததாக மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது வழக்குப்பதிவு..!
சென்னை அடையாரில் இயங்கி வரும் எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதியில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் பழுதடைந்த மின்தூக்கியை பழுதுபார்ப்பது தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் கயல்விழி அழகிரியின் பிரதிநிதியைத் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காத காரணத்தினால் கயல்விழி அழகிரியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அடையாறு வங்கி கிளைக்கு வந்து கிளை மேலாளரிடம் பேசி உள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்கை கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை அடையாறில் இயங்கும் வங்கியின் மேலாளரை மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அறைந்ததால் பரபரப்பு. கயல்விழி அழகிரி வங்கி கிளைக்கு நேரில் வந்து கிளை மேலாளரை அவதூறாகப் பேசி, அறைந்து தாக்கி மிரட்டியுள்ளார் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




