லஞ்ச வீடியோ சர்ச்சை: தவெக நிர்வாகி வீராசாமி கட்சியில் இருந்து நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியுமான வீராசாமி, லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக தவெக தலைமையகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், வீடியோவில் இடம்பெற்ற பணம் லஞ்சம் அல்ல என்றும், அது “கைமாத்து பணம்” மட்டுமே என்றும், தனக்கு லஞ்சம் வாங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் வீராசாமி விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், இந்த விவகாரம் கட்சியின் ஒழுங்கு மற்றும் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கருதி அவர் மீது கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.






