--- --:--:-- --

இரு மாநில அரசுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்..!

02

தென்பெண்ணை ஆற்றின் கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கி மாசு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய மண்டல இயக்குநர், தமிழ் நாடு மற்றும் கர்நாடகா மாசு கட்டுப்பாடு வாரியங்களின் உறுப்பினர் செயலர்கள் செப்டம்பர் 9 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 

 

தென்பெண்ணை ஆற்றின் கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கி மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், பெங்களூரு நகர கழிவுகள் தென் பெண்ணை நதியில் கலப்பதால் மாசு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

 

வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயனா மற்றும் நிபுணத்துறை உறுப்பினர் பிரஷாந்த் கார்கவா அமர்வு, தென்பெண்ணை ஆற்றில் மாசு ஏற்படுவதை தடுக்க, இரு மாநிலங்களும் இணக்கத்துடன் செயல்பட்டு பலனளிக்கக் கூடிய தீர்வுகளை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

 

 

மேலும், 6 ஆண்டுகளாக தென்பெண்ணை ஆற்றில் மாசு தொடர்பான வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும், எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், இம்மாதம் எடுத்த நீர் மாதிரிகள் கூட கெலவரப்பள்ளி அணை நீர் தீவிரமாக மாசடைந்ததைக் காட்டுகின்றது எனவும் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது. இனியும் இந்நிலை தொடரக் கூடாதென கூறி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய மண்டல இயக்குநர், தமிழ் நாடு மற்றும் கர்நாடகா மாசு கட்டுப்பாடு வாரியங்களின் உறுப்பினர் செயலர்கள் செப்டம்பர் 9 நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon