ஜனநாயகன் ரிலீஸில் புதிய ட்விஸ்ட்..!
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் அளிக்காததால், திட்டமிட்டபடி படம் இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது.
பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், தற்போது இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது. தணிக்கை சான்று பெற்றதை புதிய போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ள படக்குழு, அந்தப் போஸ்டரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் திரையரங்குகளில் பார்க்கலாம் நண்பா நண்பீஸ் எனக் குறிப்பிட்டு இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. கையில் சாட்டையுடன் விஜய் நிற்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. வரும் 24ஆம் தேதி இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. அதற்காக பிறமொழி சான்றிதழ்கள் பெறும் வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் புதிய ட்விஸ்ட்டாக ஒருநாள் முன்னதாகவே படம் ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 24ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் முன்னதாக ஜூலை 23 முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளிவர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
பிறமொழி சான்றிதழ்கள் பெறும் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து சான்றிதழ்களும் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கும் பட்சத்தில் வரும் ஜூலை 23-ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






