விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்: ஆர்.எஸ்.பாரதி
செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கு குதிரை பேரம் தான் காரணம். அதற்கான ஆதாரம் உள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் பேசியது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். குதிரை பேரம் தொடர்பாக கடந்த 4-ம் தேதி ஆளுநரை சந்தித்து புகார் அளித்தோம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதுதான் குதிரை பேரம் நடந்ததற்கான ஆதாரங்கள். கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டதாக கீழ் தரமாக பேசுகிறார்.






