அரசியலை விட்டே விஜய் ஓடுற காலம் வரும்: செல்லூர் ராஜூ
வாயில் வருவதையெல்லாம் பேசுபவன் தலைவன் அல்ல, முதலமைச்சர் விஜய் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இளைய தலைமுறையையே விஜய் பாழ்படுத்தி கொண்டிருக்கிறார்.
சட்டமன்றத்தில் உரையாற்றுவது மிக நாகரீகமானது. ராஜாஜி முதல் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் வரை விஜய் மாதிரி சட்டமன்றத்தில் பேசியது கிடையாது. அரசியலை விட்டே விஜய் ஓடுற காலம் வரும் என்றார்.






