சென்னை பறக்கும் ரயில் மறுசீரமைப்பு: மத்திய அரசிடம் நிதியுதவி கோரும் தமிழக அரசு
சென்னை பறக்கும் ரயிலை மெட்ரோ ரயில் தரத்திற்கு மேம்படுத்தி மறுசீரமைப்பு செய்வதற்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதியுதவி கோரியுள்ளது. சுமார் ₹6,600 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட திட்ட அறிக்கையை தமிழக அரசு ஏற்கனவே மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும், இதனை மத்திய அரசு திட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெறவும் அரசு திட்டமிட்டுள்ளது. நிர்வாக மாற்றத்திற்கான ஒப்பந்த ஆவணம் தற்போது ரயில்வே வாரியத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் இதற்கு இறுதி ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






