விஜய்யின் செயல்பாடு இதுவரை நன்றாக இல்லை: சாலமன் பாப்பையா கருத்து
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது தமிழக முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய ஆட்சி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ’இதுவரை அவரது செயல்பாடு நன்றாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இருப்பினும், காலம் செல்லச் செல்ல அவர் எப்படிச் செயல்படுகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை இனிவரும் காலங்களில் அவரது ஆட்சி சிறப்பாக அமைய வாய்ப்புகள் இருக்கலாம்” என்று தெரிவித்தார். – மதுரையில் சாலமன் பாப்பையா பேட்டி






