இன்று நகை வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்..!
இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்கள் காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் ( ஜூலை 13) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,200க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,020க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.240க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






