மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன் – முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி
முதலமைச்சர் கூறிய “எங்க உங்க அப்பாவைக் காணோம்” என்ற கருத்துக்கு பதிலளித்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் தாம் பதிந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கோட்டையில் தன்னைப் பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களின் கோப்புகளைப் பார்க்குமாறு குறிப்பிட்ட அவர், அந்த திட்டங்களின் வழியாகவே இந்த ஸ்டாலின் தொடர்ந்து இருப்பார் என தெரிவித்துள்ளார். மக்கள் நலத் திட்டங்கள் மூலமாக திமுக அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து மக்களிடையே நிலைத்து நிற்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





