த.வெ.க எம்.எல்.ஏ சாய் சரவணகுமார் கிண்டல்..!
இந்தி தெரியாத முதலமைச்சர், தமிழ் தெரியாத தலைமை செயலாளர், மொழி புரியாமல் தத்தளிக்கும் என்.ஆர். காங்கிரஸ் அரசு என்று புதுச்சேரி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணகுமார் கிண்டல் செய்துள்ளார். புதுச்சேரியில் அதிகளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். 15 நாட்கள் ஆகியும் இதுவரை பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை, வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க எம்.எல்.ஏ சாய் சரவணகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், துறை அதிகாரிகள் விடுமுறை எடுப்பது கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை, தலைமை செயலாளர் லீங் ஃபைல் எடுத்து வந்து முதலமைச்சரிடம் தகவல் தெரிவிக்கின்றார். ஆனால் இருவருக்கும் மொழி தெரியவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் சீருடை கொடுக்கப்பட்டு படித்து வருகின்றனர். ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்கள், சீருடை கொடுக்க வில்லை.
இந்த புத்தகங்கள், சீருடை ஆகியவற்றை ஒரு வாரத்தில் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் த.வெ.க போராட்டம் நடத்தும் என்று த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணகுமார் தெரிவித்தார். புதுச்சேரி தவெக கட்சியின் சட்டமன்ற தலைவர் யார் என்று இதுவரை அறிவிக்கவில்லை என கேள்விக்கு பதில் அளித்த அவர், யார் என்பதை தேர்ந்தெடுத்து தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என தெரிவித்தார்.





