--- --:--:-- --

நெல்லை, மதுரை, திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி-க்கள்..!

4

மிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

அந்த வகையில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டும், பணியிடை மாற்றம் செய்யப்பட்டும் வருகிறார்கள். இந்நிலையில், ஒரே நேரத்தில் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் எஸ்.பி-யாக குத்தாலிங்கம், திருவண்ணாமலை எஸ்.பி.-யாக கார்த்திகேயன், கடலூர் எஸ்.பி.-யாக விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் எஸ்.பி.-யாக சாய் பிரனீத், திண்டுக்கல் எஸ்.பி-யாக ஜெயகுமார், விழுப்புரம் எஸ்.பி.-யாக மதிவானன், விருதுநகர் எஸ்.பி-யாக விமலா, தர்மபுரி எஸ்.பி-யாக அருண் கபிலன், கிருஷ்ணகிரி எஸ்.பி-யாக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 

 

நாமக்கல் எஸ்.பி-யாக யாதவ் கிரிஷ் அசோக், மதுரை எஸ்.பி-யாக தேவநாதன், நாகப்பட்டனம் எஸ்.பி-யாக கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா, தேனி எஸ்.பி-யாக கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், நெல்லை எஸ்.பி-யாக விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி, மயிலாடுதுறை எஸ்.பி-யாக புக்யா ஸ்னேக பிரியா, திருப்பூர் எஸ்.பி-யாக ஷ்ரிஸ்டி சிங், அரியலூர் எஸ்.பி-யாக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 

Leave a Reply

Right Menu Icon