இன்றைய தங்க விலை நிலவரம் என்ன..?
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது.
அந்த வகையில் நேற்று நிலவரப்படி எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.14,300 க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 22) மீண்டும் தங்கம் விலை அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,300 க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.11,920க்கும், ஒரு சவரன் ரூ.95,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





