குடிநீர் பிரச்சினை சீக்கிரம் சரியாகிடும் – அமைச்சர் ராஜ கண்ணப்பன்
முதுகுளத்தூர் பகுதியில் குடிநீர் பிரச்சினை இரண்டு, மூன்று நாட்களில் தீர்ந்துவிடும் என பிரசாரத்தின் போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதி அளித்தார்.
தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம், வாகைக்குளம், ராசிகுளம், திட்டங்குளம், புல்லந்தை, கீரந்தை உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்மாயில் படித்துறை, நாடக மேடை, பள்ளி கட்டிடம், சமுதாயக்கூடம் உள்ளிட்டவைகள் கட்டித் தரப்படும். கூடுதலாக மகளிர் விடியல் பேருந்து இப்பகுதிக்கு விடப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்






