--- --:--:-- --

55 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வரும் விஜய்..!

3

ரோடு கூட்டத்தை அடுத்து, 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வருகிறார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில், பகல் 12 மணிக்கு தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 998 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு 7 இடங்களில் பார்கிங் வசதி, கழிவறை, குடிநீர் வசதி, ஆண்கள், பெண்கள் தனித்தனியாக செல்ல இரு நுழைவு வாயில்கள், கண்காணிப்பிற்காக 25 சிசிடிவி கேமராக்கள், 15 மருத்துவக்குழுக்கள், 6 மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

250 பேருக்கு ஒரு கேலரி என மொத்தம் 20 கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேலரியில் இருந்து 50 மீட்டர் தொலைவில், விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த மாநகர காவல் துணை ஆணையர், கூட்டம் நடைபெறும் இடம் அருகேயுள்ள மலை மீது ஏற யாருக்கும் அனுமதியில்லை என்றார்.

மைதானத்தில் இறுதிக்கட்ட பணிகளை ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு, சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் சென்றனர். தொண்டர்களின் உற்சாக வரவேற்புடன் விஜயின் பரப்புரை வாகனம், திடலுக்கு வந்தடைய, அங்கு பலரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Right Menu Icon