பிப்.1 வரை தமிழகத்தில் மிதமான மழை..!
சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் 29ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை எனவும் குறிப்பாக தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்ததாகவும் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




