--- --:--:-- --

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

2

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை பல நாள் அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. நாளுக்கு நாள் சிறுக சிறுக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த 2 நாட்களாக 2 முறை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

 

கார் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களைப் போல, தங்கமும் மாறிவிட்டதாக கூறுகின்றனர் நடுத்தர வர்க்கத்தினர். தங்கத்தின் விலை இப்படி ராக்கெட் வேகத்தில் உயர சில முக்கியமான உலகளாவிய காரணங்கள் உள்ளன. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 குறைந்து இருந்த நிலையில் இன்று அதிரடியாக ரூ.3600 உயர்ந்துள்ளது. அதன்படி இன்று (ஜனவரி 23) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.450 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,650க்கும், சவரனுக்கு ரூ.3600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,17,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,220க்கும், சவரனுக்கு ரூ.2960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 97,7600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.360க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon