--- --:--:-- --

விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2

மிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்று விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இதேப்போன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் நிகழ்வுகள் வேகமெடுத்துள்ளன. டிடிவி தினகரன், அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். தமிழகத்திற்கு நாளை வரும் பிரதமர் மோடி மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

 

இந்த பொதுக்குழு கூட்டணி கட்சிகளை உறுதி செய்து அதன் தலைவர்களை மேடையில் ஏற்ற என்டிஏ கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. மிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து மாலை அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தவெக சார்பாக தலைமை பொறுப்பில் இருக்கும் அனைவரும் வரும் 26ஆம் தேதி முதல் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தவெகவுக்கு பொது சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதே போன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் மீண்டும் டார்ச் லைட் ஒதுக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon