--- --:--:-- --

தமமுக தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி

4

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்வதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.

 

அதன் பிறகு 2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் களம் கண்ட ஜான் பாண்டியன் தோல்வி அடைந்தார். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் திமுக கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.

 

இதனை வலுப்படுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக கூட்டணியில் இணைய ஜான் பாண்டியன் பேசி வருவதாக குறிப்பிட்டார். இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வதாக ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon